PaidVerts

Saturday, 6 April 2013

Windows 8 இயங்குதளத்திற்கான Fresh Paint அப்பிளிக்கேஷன் !



மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளமானது கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் அதேவேளையில் பல அப்பிளிக்கேஷன்களும் வெளிவந்த வண்ணமுள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சிறியளவிலான வரைதல் மற்றும் புகைப்படங்களை எடிட் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான Fresh Paint எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளானது கவர்ச்சிகரமான பயனர் இடைமுகத்தினைக் கொண்டுள்ளதுடன் எளிமையான முறையில் கையாளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தரவிறக்கச் சுட்டி

Friday, 8 March 2013

மூளை விருத்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் அப்பிளிக்கேஷன்

மனிதனின் மூளையானது குறிப்பட்ட அளவு தகவல்களை சேகரிக்கக்கூடியதாக காணப்படுவதுடன் மேலதிக தகவல்களை சேமிக்க முனையும்போது முன்னைய தகவல்கள் அழிவடைதல் இயல்பாகவே காணப்படுகின்றது.
எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வாக சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானதொரு பயிற்சியை கணனித்தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளும் வசதியினை Anki எனப்படும் அப்பிளிக்கேஷன் தருகின்றது.


இம்மென்பொருளானது Arabic, Chinese, English, French, Japanese, Spanish போன்ற மொழிகளில் அமைந்த ஞாபகமூட்டல், மற்றும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளதுடன் Windows, Mac, Ubuntu போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறும் வெளியிடப்பட்டுள்ளன.

விண்டோஸ் (Windows) இயங்குதளத்திற்கான தரவிறக்கச் சுட்டி
மேக் (Mac)இயங்குதளத்திற்கான தரவிறக்கச் சுட்டி
உபுண்டு (Ubuntu) இயங்குதளத்திற்கான தரவிறக்கச் சுட்டி
இணையதள முகவரி