PaidVerts

Monday, 17 December 2012

வேகமாக டாஸ்க் மேனேஜர் பெற

நம் வசத்திற்கு வராமல், இயங்கவும் செய்யாமல், மூடவும் முடியாமல், திரையில் அப்படியே உறைந்து நிற்கும் புரோகிராம்களை, மூடுவதற்கு விண்டோஸ் டாஸ்க் மானேஜர் உதவுகிறது. அத்துடன், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் எவை, மெமரி எந்த அளவிற்கு ஒவ்வொரு புரோகிராமாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதனை நமக்கு டாஸ்க் மேனேஜர் காட்டுகிறது. இந்த டாஸ்க் மானேஜரைப் பெற வழக்கமாக கண்ட்ரோல் + ஆல்ட்+ டெல் கீகளை அழுத்துவோம்.
இன்னும் வேகமாக டாஸ்க் மேனேஜர் பெற, சில வழிகள் உள்ளன. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பாப் அப் விண்டோவில், Task Manager என்பதில் கிளிக் செய்து பெறுவோம்.
இரண்டாவதாக, கண்ட்ரோல் + ஷிப்ட்+ எஸ்கேப் (Ctrl Key, Shift Key and Esc key) கீகளை அழுத்தினால், டாஸ்க் மேனேஜர் கிடைக்கும். நம் மவுஸ் சில நேரங்களில் நகர்ந்து செல்லாமல், கிளிக் செய்திடாமல் முரண்டு பிடிக்கும். அப்போது மேலே சொல்லப்பட்ட கீகள் நமக்கு உதவும்.


 Copyrights : Dinamalar

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13358&ncat=4

No comments:

Post a Comment