PaidVerts

Saturday 6 April, 2013

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான புத்தம் புதிய WinZip மென்பொருள்

பெரிய அளவான கோப்புக்களை சுருக்கி பரிமாற்றம் செய்துகொள்ளவும், வைரஸ் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கவும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் அவற்றுள் இலவசமாகவும், பாதுகாப்பானதாகவும் காணப்படுவதுடன் எளிமையாகக் கையாளக்கூடிய மென்பொருளான WinZip காணப்படுகின்றது.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பானது சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடியவாறு வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருளின் உதவியுடன் Box, SkyDrive, Dropbox மற்றும் Google Drive போன்ற ஒன்லைன் சேமிப்பகங்களில் நேரடியாக பரிமாற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தரவிறக்கச் சுட்டி

அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப்படுத்தியுள்ளது.
கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.USB 2.0 இணைப்பிகளை உடைய இந்த சுட்டிகளின் மூலம் எந்தவிதமான மேற்பரப்புக்களில் காணப்படும் எழுத்துக்களையும் ஸ்கான் செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது.
இதற்காக குறித்த சுட்டியுடன் தரப்பட்டுள்ள ஸ்கான் செய்வதற்கான பொத்தானை அழுத்தியதும் சுட்டி காணப்படும் மேற்பரப்பிலுள்ள எழுத்துக்கள் ஸ்கான் செய்யப்படும்.
இந் நவீன ரக சுட்டிகளை 79 அமெரிக்க டொலர் பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும்.

http://www.youtube.com/watch?v=gzzyrdu-i2c&feature=player_embedded