Saturday, 23 August, 2014

மெயில Signout பண்ண மறந்துட்டீங்களா?

கவலைய விடுங்க

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் என்பது அத்தியாவசிய தேவையாகி விட்டது என்று சொல்லலாம்.
ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருவதால் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சில நேரங்களில் அவசர தேவைகளுக்காக பிறரது கணனி மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்துகிறோம்.
பிறகு அவசரத்தில் கணக்கை முழுவதும் முறைப்படி signout செய்யாமல் விட்டுவிடுவோம். இதனால் மற்றவர்கள் நமது கணக்கை எளிதாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
சிலரின் கணக்குகளில் 10,000க்கும் அதிகமான மெயில்கள் இருக்கும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஏனெனில் அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் விசிட் செய்பவராக இருக்கலாம். அவர் எத்தகைய முக்கியமான தகவல்களையும் அதனுள் வைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் தினமும் தங்கள் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது இந்த செயல் ஆபத்தான ஒன்றாக இருக்கும்.
முறைப்படி signout செய்யாமல் பிறகு "அய்யோ இப்படி மறந்து வந்துட்டேனே" என வேறு இடத்தில் இருந்து தூக்கம் தொலைப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
இப்படிபட்டவர்களுக்கு தான் gmail தனது சிறந்த சேவையை வழங்கியுள்ளது. எந்த இடத்தில் நீங்கள் உங்கள் கணக்கை முறைப்படி மூடா விட்டாலும், வீட்டில் இருந்தபடியே அந்த கணக்கை எளிதாக மூடி விடலாம்.
என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்கள் Gmail கணக்கை Login பண்ண வேண்டும்.

 1)  மேற்புறம் வலது பக்கத்தில் உங்கள் ஜிமெயில் கணக்கின் புகைபடத்தை கிளிக் செய்யவும், அதில் அக்கௌன்ட் என்பதை கிளிக் செய்யவும்,

2) பின்பு தோன்றும் பக்கத்தில் செக்யூரிட்டி சேவையை கிளிக் செய்யவும்,


3) அதன் பின்பு செக்யூரிட்டி பக்கத்தில்-> ரிசென்ட் அக்டிவிட்டியில் -> வியுவ் ஆல் ஈவென்ட்ஸ்யை கிளிக் செய்யவும்,4) இப்போது சரி பார்த்தக் கொள்க :)


உங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா?

இதோ மீட்க வழி!!!தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.
இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ். வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம்.
ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணனியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.
உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.


Wednesday, 11 June, 2014

மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க !இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது மொபைல் போன்.உலகில் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம், அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது.
கூடவே அருகில் வைத்து பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் மூலம் பல்வேறு தீமைகளும் இருக்கின்றன என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
1. மொபைல் போனை பயன்படுத்தும்போது பெரும்பாலும் உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.
3. மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.
4. குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும். இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும்.
5. இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.
6. உங்கள் தேகம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.
7. குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது.


தெரிந்து கொள்வோம்: இணையத்தில் ‘Backbone’ பயன்பாடு பற்றி எத்தனை பெயருக்கு தெரியும்?
இணையத்தின் முதுகெலும்பு என அழைக்கப்படும் ‘Backbone’ தகவல் பறிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்போது உள்ள காலகட்டங்கள் அனைத்தும் இணையத்தை மையமாக கொண்டு கடந்து வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் தகவல் பறிமாற்றத்தை பற்றி எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா?
மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய வாக்காளர் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு பெரியது. இந்த வியக்கும் எண்ணை மிஞ்சும் வித்தை தான் ஒரு நொடிக்கு உலகம் முழுவதும் பறிமாற்றப்படும் தகவல்கள். நம்ப முடியாவிட்டாலும் இது தான் உண்மை.
அதாவது 5 ஆண்டுகளுக்கு முன் நொடிக்கு 30 டெரா பைட்டுகள் என்ற இந்த அளவு கடந்த மாதம் 300 டெரா பைட்டுகளாக அதிகரித்துள்ளது. புரியும் படி சொன்னால் ஒரு டெரா பைட் என்பது கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு நிகரான அளவு இதன் படி பார்த்தால் 30,000 திரைப்படங்கள் பார்ப்பதற்கான தகவல் பறிமாற்றம் ஒவ்வொரு நொடியும் நடந்தபடி உள்ளது.
இந்த தகவல் பறிமாற்றம் ‘backbone’ எனப்படும் இணையத்தின் உள்கட்டமைப்பில் உள்ளது. இந்த இணையத்தின் பின்னெலும்பு பல கடல்களையும், மலைகளையும் தாண்டி, பல நாடுகளில் உள்ள இணைய சேவை நிறுவனங்களை இணைக்கிறது.
இந்த நிறுவனங்கள் ‘router’ மூலமும், பல்வேறு இணைப்பு சாதனங்கள் வழியாகவும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
இந்த வலுவான பின்னெலும்பை உருவாக்கி வாடிக்கையாளர்களை கவர ஃபைபர் ஆப்டிக் கேபிள் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் ஐரேப்பாவிலும், கடல் வழியாக இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலும் தனது நெட்வொர்கை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதே போல் இந்த நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் பிரைவசி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு மட்டுமல்லாமல், பாதுகாப்பாக இத்தகைய தகவல்களை மற்றவர்களிடம் பறிமாறும் பல தொழில்நுட்பம் வந்து விட்டன. இருப்பினும் இவை இணையத்தில் இயங்க உள்கட்டமைப்பும் பின்னெலும்பும் தேவைப்படுகின்றன.
இதற்காக புதுமையான மற்றும் புரட்சிகரமான முயற்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர் (mesh) வலைப்பின்னல் நெட்வொர்க்.


Nixi (national internet exchange of india)- இந்த அமைப்பானது இந்தியாவின் இணைய வசதிக்கு முதுகெலும்பாய் உள்ளது. நமக்கு தேவைப்படும் இணையம் மற்றும் இணையம் சார்ந்த வசதிகளை ISP (Internet service provider) மூலமாக இந்த அமைப்பு நம்மிடம் கொண்டு சேர்க்கிறது.

Wednesday, 5 February, 2014

கரப்பான் பூச்சிகளின் மூலம் மின்சாரம்! ஜப்பானில் சாதனை !

கரப்பான் பூச்சிகளை வைத்து ஜப்பான் பல்கலைகழக மாணவர்கள் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளனர்.
கரப்பான் பூச்சிக்கு இரு மீசைகள் இருக்கும், அதாவது இவைகளை உணர் உறுப்புகள்(Antennae) என்று அழைக்கின்றனர்.
இதன் மூலம் முன்புறத்தில் ஏதேனும் தடை உள்ளதாக என அறிந்து கொள்ளும்.
இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள்(cerci) உள்ளன, பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும்.
இதனை கொண்டு ஜப்பானின் ஒசாகா பல்கலைகழகம் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளது.

இந்த சென்சார்களின் மூலம் மிக எளிதாக தகவல்களை பரிமாறி கொள்ள முடியும்.
கரப்பான் பூச்சிகளின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய, கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ்(trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்துவார்கள்.
இந்த திரகம் உள்ளே எலக்ட்ரோட்ஸை உருவாக்கும், அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும்.
இந்த எலக்ட்ரோட்ஸ் மூலம் ஊசி அனோட் /காத்தோடாக மாறி நிரந்திர மின்சாரம் கிடைக்கும், இது சென்சாரின் உபயோகத்திற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
இதற்கு முன்பு சோதனை செய்து பார்த்த போது, ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சாரத்தை தந்ததாம்.
எப்படியோ, கரப்பான் பூச்சியில இருந்து கரண்ட கண்டுபிடிச்சுடாங்க!...


Tuesday, 17 December, 2013

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க !

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.
பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம்.
நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.
பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும்.
அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.
உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும்.
பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இப்பொழுது புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.


Wednesday, 4 December, 2013

டெக்ஸ்டாப் கணனிகளில் இப்போது Voice Search !

கூகுள் நிறுவனத்தின் புரட்சிகளுள் குரல்வழி மூலமான இணையத்தேடலும் ஒன்றாகும்.
இவ்வசதியினை தனது பிந்திய இயங்குதள பதிப்பான Kitkat இயங்குளத்தில் இலவசமாக வழங்கியுள்ளது.
கூகுள் குரோமில் மட்டுமே செயற்படும் இவ்வசதியினை தற்போது டெக்ஸ்டாப் கணினிகளுக்கும் தந்துள்ளது.
இதற்காக Google Voice Search Hotword எனும் நீட்சியை குரோம் உலாவியில் நிறுவிக்கொண்டு மைக்ரோபோனினை பயன்படுத்துவதற்குரிய அனுமதியை வழங்க வேண்டும். 


தரவிறக்கச் சுட்டி

உரிமம் : Techlankasri