PaidVerts

Wednesday, 11 June 2014

மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க !



இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது மொபைல் போன்.உலகில் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம், அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது.
கூடவே அருகில் வைத்து பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் மூலம் பல்வேறு தீமைகளும் இருக்கின்றன என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
1. மொபைல் போனை பயன்படுத்தும்போது பெரும்பாலும் உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.
3. மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.
4. குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும். இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும்.
5. இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.
6. உங்கள் தேகம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.
7. குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது.


No comments:

Post a Comment