PaidVerts

Tuesday 12 February, 2013

இனி கழிப்பறைகளிலும் iPad சாதனத்தை பாவிக்க முடியும்

தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணினியினை பயன்படுத்ததாவர்கள் மிகவும் சொற்ப அளவானவர்களே என்று கூறும் அளவிற்கு அனேகமானவர்களால் பயன்படுத்தப்படுவதுடன், தமது நேரத்தில் பெருமளவை இக்கணினிகளுடனேயே செலவிடுகின்றனர்.

இவ்வாறு iPad கணினிகளை தொடர்ச்சியாக பாவனை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கென புதிய தாங்கி (Pedestal Stand) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உபகரணமானது செல்லும் இடங்களிலெல்லாம் iPad கருவியினை பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் விசேடமாக கழிப்பறைகளில் பயன்படுத்துவதற்கென தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் உதவியுடன் ஆகக்கூடுதலாக 10 அங்குல அளவுகொண்ட iPad சாதனத்தை நிறுத்தி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

copyrights : tech.lankasri.com 

Stem Cellsகளை 3D பிரிண்ட் எடுத்து மனித உறுப்பை உருவாக்கும் முயற்சி(வீடியோ இணைப்பு)

பிரிட்டனில் Stem Cellsகளை 3D தொழில்நுட்பத்தில் நகலெடுத்து(printing) அதனடிப்படையில் அந்தக் Stem Cellsகளாலான மனித உறுப்பை புதிதாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கின்றனா்.
மனிதக் கருவின் ஆரம்ப கட்டத்தில் எடுக்கப்படும் Stem Cellsகள் மூலம் உடலில் எந்த வகை திசுவையும் உருவாக்க முடியும்.
இதனால் குறிப்பிட்ட உறுப்புகளை அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறுப்புகளை திசுக்களை கொண்டு மனிதர்களால் உருவாக்க முடியும் என்று எடின்பரோவில் உள்ள ஹீரியோட் வாட்(Heriot-Watt) பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதன்மை விஞ்ஞானியான முனைவர் வில் ஷீ(Will Shu) அளித்த பேட்டியில், 3D தொழில்நுட்ப நகலெடுப்பில் உள்ள நுண்தடுப்பு(Microvalve) இதழ் வசதியால் கருவிலிருந்து பெறப்படும் Stem Cellsகளை அடுக்கடுக்காக உருவாக்கி நமக்கு வேண்டிய மனித உறுப்பைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த அணுக்கள் பன்மையாற்றலை பெற்றிருப்பதால் விரும்பிய உறுப்புகளுக்குரிய அணுவைப் பெற முடியும்.
அதாவது பல வித உறுப்புகளை இந்தக் Stem Cellsலிருந்து உருவாக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கோபுக்காட்சி

Copyrights : tech.lankasri.com 

எதிர்காலத்தில் iPad இப்படித்தான் இருக்குமாம்!


அப்பிள் நிறுவனம் தனது அதிரடியான தொழில்நுட்ப புரட்சியினால் பல்வேறு அதிநவீன சாதனங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.
இப்புரட்சியின் அடிப்படையில் உருவான சாசனங்களில் ஒன்றான iPad ஆனது தற்போது Mini iPad எனும் பெயருடன் அமோகமாக விற்பனையாகிவருகின்ற நிலையில் எதிர்காலத்தில் வெளிவரவுள்ள iPad தொழில்நுட்பம் ஒளி ஊடுபுகவிடக்கூடிய தொடுதிரைகளைக் கொண்டதாக இருக்கும் என்று ரிச்சார்டோ அபோன்ஸோ என்பவர் கற்பனை செய்துள்ளதுடன், தனது கற்பனையை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் டெமோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.


கோபுக்காட்சி



 Coprights : tech.lankasri.com

ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.
பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர்.
ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது.

கண்கள், இதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் கணனி சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன.
இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை மனிதன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறான். வருகிற மார்ச் 11ம் திகதி வரை அவனை பொதுமக்கள் பார்த்து மகிழலாம்.
செயற்கை மனிதனின் சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், செயற்கை நுரையீரல்கள், ஸ்வாசீன் பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கோபுக்காட்சி

Copyrights : tech.lankasri.com


மின்னஞ்சல் படிக்கப்பட்டு விட்டதா? இல்லையா? என தெரிந்து கொள்வதற்கு.

நாம் அனுப்பிய மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்து படித்து விட்டாரா? இல்லையா? என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். 
இதற்கு Right Inbox என்ற Application உதவி புரிகிறது. ஜிமெயில் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த வசதியை Google Chrome, Firefox, Safari உலாவிகளில் பயன்படுத்த முடியும்.
1. முதலில் Right Inbox தளத்திற்கு சென்று "Install Now" என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் உலாவிக்கு ஏற்றது போன்று, தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
3. தற்போது உங்கள் உலாவியில் Extension ஆக இது Add ஆகி விடும். ஒரு முறை உங்கள் Browser-ஐ close செய்து ஓபன் செய்யுங்கள் அல்லது ஜிமெயிலை Refresh செய்யுங்கள்.
4. இப்போது உங்கள் ஜிமெயிலில் "Right Inbox is Ready" என்று வருவதை Continue கொடுங்கள்.
5. அடுத்த பக்கத்தின் Grand Access என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
இங்கே Grand Access கொடுப்பதால் உங்கள் Password போன்ற தனிப்பட்ட தகவல்களை அவர்களால் Access செய்ய முடியாது.
6. இப்போது மின்னஞ்சல் ஒன்றை Compose செய்யுங்கள். அதில் சில புதிய வசதிகள் இருப்பதை காணலாம்.அதில் Track தான் நாம் பயன்படுத்தப் போகும் வசதி.
மின்னஞ்சலை Compose செய்யும் போது Track என்பதை கிளிக் செய்து அனுப்பவும்.
7. இதன்பின் மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்ததும், உங்களுக்கு ஒரு செய்தி வரும். இதிலிருந்து நீங்கள் படித்துவிட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம். 

QR Code - இனை தயாரித்துக்கொள்வதற்கு உதவும் மென்பொருள்

நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக உச்சத்தை தொட்டுவரும் தொழில்நுட்ப உலகில் Bar Code - இற்கு அடுத்தபடியாக தற்போது QR Code - இன் பயன்பாடு துரித கதியில் அதிகரித்து வருகின்றது.இதற்கு காரணம் Bar Code - இனை காட்டிலும் QR Code - இனை கைப்பேசிகள் போன்ற அதிநவீன இலத்திரனியல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுதல், இலகுத்தன்மை, பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்பனவற்றினை குறிப்பிடலாம்.
இவ்வாறான QR Code - இனை தயாரித்துக்கொள்வதற்கு QR Label Creator எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் எழுத்துக்கள், இணைய முகவரிகள் ஏனைய தரவுகளை உள்ளடக்கியதாக QR Code - இனை உருவாக்கிக்கொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி

 

புதிய வகை வைரஸ் மென்பொருள் அறிமுகம்

இணையப்பாவனையினூடாக பரவும் வைரஸ்கள், மல்வேர்கள் போன்றவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அன்டி வரைஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான மென்பொருட்களில் Bitdefender Internet Security மென்பொருளும் சிறந்த செயற்பாடுடையதாகக் கருதப்படுகின்றது. இவ்வாறிருக்கையில் இம்மென்பொருளிற்கான புதிய பதிப்பான Bitdefender Internet Security 2013 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அத்துடன் ஒருவருடத்திற்கான சீரியல் இலக்கமும் இலவசமாக தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


இம்மென்பொருளை நிறுவுவதற்கு கணினி கொண்டிருக்கவேண்டிய தகைமைகள்.
1. Microsoft Windows XP,Vista, 7 அல்லது Windows 8 இயங்குதளம்
2. CPU: 800MHz processor
3. RAM: 1 GB
4. வன்றட்டில் 1.8 GB இடவசதி

தரவிறக்கச் சுட்டி
சீரியல் இலக்கம் - Q5YW7GP அல்லது 3NVQXKI

copyrights tech.lankasri.com