PaidVerts

Tuesday 12 February, 2013

Stem Cellsகளை 3D பிரிண்ட் எடுத்து மனித உறுப்பை உருவாக்கும் முயற்சி(வீடியோ இணைப்பு)

பிரிட்டனில் Stem Cellsகளை 3D தொழில்நுட்பத்தில் நகலெடுத்து(printing) அதனடிப்படையில் அந்தக் Stem Cellsகளாலான மனித உறுப்பை புதிதாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கின்றனா்.
மனிதக் கருவின் ஆரம்ப கட்டத்தில் எடுக்கப்படும் Stem Cellsகள் மூலம் உடலில் எந்த வகை திசுவையும் உருவாக்க முடியும்.
இதனால் குறிப்பிட்ட உறுப்புகளை அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறுப்புகளை திசுக்களை கொண்டு மனிதர்களால் உருவாக்க முடியும் என்று எடின்பரோவில் உள்ள ஹீரியோட் வாட்(Heriot-Watt) பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதன்மை விஞ்ஞானியான முனைவர் வில் ஷீ(Will Shu) அளித்த பேட்டியில், 3D தொழில்நுட்ப நகலெடுப்பில் உள்ள நுண்தடுப்பு(Microvalve) இதழ் வசதியால் கருவிலிருந்து பெறப்படும் Stem Cellsகளை அடுக்கடுக்காக உருவாக்கி நமக்கு வேண்டிய மனித உறுப்பைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த அணுக்கள் பன்மையாற்றலை பெற்றிருப்பதால் விரும்பிய உறுப்புகளுக்குரிய அணுவைப் பெற முடியும்.
அதாவது பல வித உறுப்புகளை இந்தக் Stem Cellsலிருந்து உருவாக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கோபுக்காட்சி

Copyrights : tech.lankasri.com 

No comments:

Post a Comment