PaidVerts

Wednesday 12 June, 2013

சோனி அறிமுகப்படுத்தும் வாட்டர் புரூவ் டேப்லட் !

ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
Xperia Z எனும் தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் இந்த டேப்லட்கள் 10.1 அங்குல அளவு 1920 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.5 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Snapdragon S4 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனத்தில் 8.1 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 2.2 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.
இவற்றின் சேமிப்பு நினைவகமானது 16GB ஆக அமைந்துள்ளதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 32 GB வரை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இவை இந்தியப் பெறுமதியில் 44,990 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. 



தற்போது பேஸ்புக் சட்டிங் மூலம் புகைப்படங்களையும் அனுப்பலாம் !

இணைய உலகில் முதற்தர சமூக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் ஆனது தற்போது பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இப்பயனர்களை தொடர்ந்து தக்கவைக்கும் முகமாகவும், புதிய பயனர்களை தன்பால் ஈர்க்கும் வகையிலும் பல்வேறுபட்ட புதிய அம்சங்களை உட்புகுத்தி வரும் அந்நிறுவனம் தற்போது மேலும் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது பேஸ்புக்கினூடாக நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும்போது விரும்பிய புகைப்படங்களையும் இலகுவாக அனுப்பி மகிழக்கூடிய வசதியே அதுவாகும்.
இப்புதிய வசதியானது பயனர்களை அதிகளவில் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Screen Capture பயன்படும் புத்தம் புதிய மென்பொருள் !


கணனித் திரையில் இடம்பெறும் செயற்பாடுகளை Capture செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது SmartsysSoft Screen Capture எனும் மென்பொருளும் தற்போது இணைந்துள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் எந்தவொரு அப்பிளிக்கேஷனையும் Capture செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் jpg, gif, bmp, png போன்ற கோப்பு வகைகளைாக சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதன் உதவியுடன் Capture செய்யப்பட்ட படத்தின் மீது டெக்ஸ்ட், கோடுகள், வெவ்வேறு வடிவங்கள் போன்றவற்றினை வரைந்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கமெராக்களில் இருந்து அழிந்த புகைப்படங்களை மீட்பதற்கு !


நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பயனாக தற்போது அதிகளவில் டிஜிட்டல் கமெராக்களே பயன்பாட்டில் காணப்படுகின்றன.
இக்கமெராக்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை சேமிப்பதற்கு அவற்றில் நிரந்தரமான அல்லது பிரத்தியேகமான மெமரி கார்ட்கள் காணப்படும்.
இச்சேமிப்பு சாதனங்களிலில் இருந்து அழிந்துபோன புகைப்படங்களை இலகுவாக மீட்பதற்கு DataToUS Card Recovery எனும் மென்பொருள் பெரிதும் உதவுகின்றது.
இதன் மூலம் குறித்த கமெராவிலிருந்து மெமரி கார்ட்டினை நீக்காது நேரடியாகவே அழிந்த புகைப்படங்களை மீட்க முடிவதுடன், புகைப்படம் தவிர வீடியோ கோப்புக்கள் மற்றும் ஆடியோ கோப்புக்களையும் கமெராவிலிருந்து மீட்டுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தரவிறக்கச் சுட்டி

உரிமம்: Techlankasri

அதிகமாக செல்போன் பாவிப்பவரா நீங்கள்? இதை படியுங்க முதலில் !

செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்துவருகின்றன.
செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள்
அது, செல்போனில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு, மனிதனையும் பாதிக்கும் என்பதுதான்.
இந்தக் கதிர்வீச்சை எப்படி அளக்கிறார்கள்? இதனை “எஸ்.ஏ.ஆர். வேல்யூ” என்கிறார்கள். இப்படிச் சொன்னதும், ஏதோ இது செல்போனின் விலை மதிப்பு என்று நினைக்காதீர்கள்.
“ஸ்பெசிபிக் அப்சர்ப்ஷன் ரேட்” என்பதன் சுருக்கமே “எஸ்.ஏ.ஆர்.” என்பது. அதாவது ஒரு செல்போன் தொடர்பில் இருக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் “எலக்ட்ரோ மேக்னடிக்” அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே “எஸ்.ஏ.ஆர்”.
இது செல்போனில் இருந்து வெளியாகும் சக்தியை அல்லது கதிர்வீச்சை உடல் உட்கிரகிக்கும் அளவைக் குறிப்பது.
இது நாம் பயன்படுத்தும் செல்பேசியின் “வாட்ஸ் பெர் கிலோ கிராம்” என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது. “எஸ்.ஏ.ஆர். வேல்யூ” குறைந்திருந்தால், உங்கள் செல்பேசி மிகவும் பாதுகாப்பானது.
குறைந்த அளவு கதிர்களே செல்போனில் இருந்து வெளியேற்றப்பட்டு அது உடலுக்குள் ஊடுருவுகிறது என்பதைக் குறிக்கிறது.
ஒவ்வொரு செல்போனும் செல்பேசி டவர்களுடன் இணைக்கப்படும்போது, அதில் இருந்து ரேடியா கதிர்கள் வெளியாகின்றன. இந்தக் கதிர்கள் உடலில் உள்ள திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன.
இது எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் எஸ்.ஏ.ஆர். வேல்யூவை வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்கள், செல்பேசியின் விவரப் பக்கத்தில் உண்மையாகவே குறிப்பிடுகின்றன.
செல்பேசி நிறுவன இணைய தளங்களில் அது பற்றிய விவரத்தில் ஒவ்வொரு செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் தவறாமல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை வைத்து பாதுகாப்பான செல்பேசிகளைத் தெரிவுசெய்து நாம் வாங்கமுடியும்.
இந்தியாவில் இந்த “எஸ்.ஏ.ஆர்” இன் அதிகபட்ச மதிப்பு 1.60 வாட்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தயாராகும் செல்பேசிகளில் எஸ்ஏஆர் மதிப்பு பற்றிய விவரம் இல்லாததாலும், அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும், உடலுக்குத் தீமை பயக்காத, பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்காமலே இருந்தது.
செல்பேசி என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபலமாகத் தொடங்கியது. அதனால் இதன் மூலம் அடையும் பாதிப்புகளைக் கண்கூடாக இன்னும் காணவில்லை.
ஆனால், ஓர் எச்சரிக்கையாக, செல்பேசிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கதிர்வீச்சுக்களால், அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சாதாரண சரும நோய் முதல், புற்றுநோய் வரை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செல்பேசிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அளவுக்கு இதன் பாதிப்புகள் குறித்து தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வால், இந்தியாவிலும் குறைந்த எஸ்.ஏ.ஆர். மதிப்பைக் கொண்ட செல்பேசிகளின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
செல்பேசிகளை விற்கும்போது, அதில் தவறாமல் “எஸ்.ஏ.ஆர். மதிப்பு” தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
வரும் செப்டம்பர் 1ம் திகதி முதல் அனைத்து செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் வெளிப்படையாகத் தெரியும்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செல்போனை வாங்கச் செல்லும்போது அதிகப்படியான பயன்பாடு, சேமிக்கும் திறன், புதிய மொடல், விலை குறைவு என்று பல்வேறு விடயங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனி எஸ்.ஏ.ஆர். மதிப்பையும் பார்த்து, உடலுக்குத் தீமை பயக்காத செல்பேசிகளைத் தேர்வு செய்து வாங்க வேண்டும்.

விண்வெளியில் புதிய நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு !

விண்வெளியிலுள்ள பால் வீதியில் ஒரு இருட்டு பள்ளத்திற்குள் ஆயிரம் நட்சத்திரங்களை உள்ளடக்கிய நட்சத்திர மண்டலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க- ஹவாய் தீவு வி.எம். கெக் ஆய்வுக்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள உலகின் அதி நவீன சக்திவாய்ந்த டெலெஸ்கோப் இந்த நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மந்தமான குள்ள நட்சத்திர மண்டலத்திற்கு சேகு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
பால் வீதியில் இதுபோன்று குள்ள நட்சத்திர மண்டலம் இருப்பதாக முன்னரே கணித்து சொல்லப்பட்டு இருந்ததாகவும், அதை கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக தேடி கொண்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உரிமம் : techlankasri

Friday 19 April, 2013

ஸ்மார்ட்போன் தொலைந்தால் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு வழிகள் !

ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள்.
ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.
'பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அன்னியர் பயன்படுத்துவதற்கெதிராக பாதுகாக்கும்.

இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான முறைகளில் மேற்படி பாதுகாப்பை திறக்க முயற்சித்தால், செல்போன் தானாக தனது டேட்டா அனைத்தையும் அழித்துக்கொள்ளும் வகையில் கட்டமைத்துக் கொள்ளலாம்.
மொபைல் ட்ராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விபரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரச்செய்யுமாறு உள்ளிடலாம்.
அடுத்ததாக, மொபைல் திருட்டுக்கெதிரான இன்ஷூரன்ஸ் பற்றி பார்ப்போம். பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் நூற்று சொச்ச ரூபாய்தான்.
மொபைல் காணாமல் போனது உறுதியானதும் விரைந்து சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை செயல்படாது செய்யுங்கள்.
பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.
முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பின்னர், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.
இந்த சான்றோடு மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விபரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும்.
இந்தத் தொகை, அநேகமாக அதே ஸ்மார்ட் போனின் சரிந்திருக்கும் தற்போதைய விலைக்கு இணையாக இருக்கும் என்பது ஆறுதல். இந்த வகையில் பண இழப்பை சரிசெய்துவிடலாம்.
ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை. மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான்.
இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு கோரலாம்.
செல்போனில் உங்களது பிறந்தநாள், வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்கள், மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டு போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பதியக்கூடாது. இது ஸ்மார்ட் போன் திருடுபோன சூட்டில் உங்கள் வங்கி கணக்கின் இருப்பையும் காணாமல் போக வழி செய்துவிடும்.
இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தனிப்பட்ட கணக்கு தகவல்களை பிறர் அணுகாமல் தவிர்க்க அவ்வப்போது அவற்றிலிருந்து வெளியேறியதும் லாக் அவுட் செய்ய வேண்டும்.
ஆனால், பலரும் தங்கள் வசதிக்காக, ஒற்றை தொடுகையில் இ-மெயில், ஃபேஸ்புக் போன்றவை திறக்குமாறு வைத்திருப்பார்கள்.
இவர்கள், ஸ்மார்ட் போன் தொலைந்ததை உறுதிபடுத்திக் கொண்டதும் உடனடியாக வேறு இணைய இணைப்பின் மூலம் தங்கள் இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டால், பிரச்னையிலிருந்து தப்பலாம்.
தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட் போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம்.
காரணம், எடுத்த படங்களை அழித்துவிட்டாலும் அவற்றை மீட்பதற்கான உபத்திரவ தொழில்நுட்பங்கள் நமக்கு பெரும் அச்சுறுத்தலே. மற்றபடி ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.
உங்கள் போனில் இந்த வசதி இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு போன்ற அப்ளிகேஷன்கள் உதவியோடு இந்த பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளலாம்.
ஸ்மார்ட் போனின் உள்ளடங்கிய மெமரி தவிர்த்து, மெமரி கார்டு போன்ற எளிதில் அகற்றக்கூடிய சேமிப்பு அம்சங்களிலும் இதேபோல அப்ளிகேஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம்.
தனிப்பட்ட பாஸ்வேர்டு தருதல், குறிப்பிட்ட ஹேண்ட்செட்டில் இணைத்தால் மட்டுமே அந்த பாஸ்வேர்டும் செயல்படுவது என்று பல வகைகளிலும் மெமரி கார்டு பாதுகாப்புக்கு அப்ளிகேஷன்கள் கைகொடுக்கும். அரிய படங்களை எப்போதும் மெமரி கார்டிலேயே வைத்திராது, அவ்வப்போது 'பேக்கப்' எடுத்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.