இணையத்தின் வழி பைல் அனுப்புவதில் இதுவரை இருந்த தடையை, கூகுள்
உடைத்தெறிந்துள்ளது. 10 ஜிபி அளவு உள்ள பைலையும் தன் கூகுள் ட்ரைவிலிருந்து
, ஜிமெயில் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது. இது வழக்கமாக அஞ்சல்
வழி தற்போது அனுப்பப்படும் பைலைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும்.
ஜிமெயிலில், கூகுள் ட்ரைவில் உள்ள பைலை, அது 10 ஜிபிக்குள் உள்ளவரையில்
அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. புதிய மெயில் கம்போஸ் விண்டோ
பயன்படுத்துபவர்கள், இந்த அறிவிப்பினைப் பெற்றிருக்கலாம். இது குறித்து
மேலும் அறிய விரும்புபவர்கள் http://gmailblog. blogspot.com /2012/11/gmailanddrivenewwaytosendfiles.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.Copyrights: Dinamalar

No comments:
Post a Comment