PaidVerts

Friday 8 March, 2013

PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்

கணனியில் பயன்படுத்தப்படும் பல்வேறு கோப்பு வகைகளுள் டெக்ஸ் (Text) , மற்றும் புகைப்படங்கள் அடங்கியவற்றினை மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு PDF கோப்புக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இதனால் ஏனைய கோப்புக்களையும் PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் குறைந்தளவு வசதிகள் தரப்பட்டுள்ளதுடன், பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டிய தேவை காணப்படுகின்றது.
ஆனால் doPDF எனும் மென்பொருளானது விண்டோஸ் இயங்குளங்களில் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் சிறந்த பயனர் இடைமுகத்துடன் கூடியதாக இலவசமாகக் கிடைக்கின்றது.
4 MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் பின்வரும் கோப்புக்களை PDF கோப்பாக மாற்றியமைக்க முடியும்.
Word documents
Excel sheets
PowerPoint presentations
AutoCad drawings
Contracts
Workflows
Agreements
Marketing plans
Forms
Products list
Price list
Chart
Email
Web page

தரவிறக்கச் சுட்டி

No comments:

Post a Comment