![]() கூடவே அருகில் வைத்து பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் மூலம் பல்வேறு தீமைகளும் இருக்கின்றன என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 1. மொபைல் போனை பயன்படுத்தும்போது பெரும்பாலும் உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். 2. தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும். 3. மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. 4. குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும். இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும். 5. இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம். 6. உங்கள் தேகம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை. 7. குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது. |
Wednesday, 11 June 2014
மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க !
தெரிந்து கொள்வோம்: இணையத்தில் ‘Backbone’ பயன்பாடு பற்றி எத்தனை பெயருக்கு தெரியும்?
![]() மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய வாக்காளர் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு பெரியது. இந்த வியக்கும் எண்ணை மிஞ்சும் வித்தை தான் ஒரு நொடிக்கு உலகம் முழுவதும் பறிமாற்றப்படும் தகவல்கள். நம்ப முடியாவிட்டாலும் இது தான் உண்மை. ![]() இந்த தகவல் பறிமாற்றம் ‘backbone’ எனப்படும் இணையத்தின் உள்கட்டமைப்பில் உள்ளது. இந்த இணையத்தின் பின்னெலும்பு பல கடல்களையும், மலைகளையும் தாண்டி, பல நாடுகளில் உள்ள இணைய சேவை நிறுவனங்களை இணைக்கிறது. இந்த நிறுவனங்கள் ‘router’ மூலமும், பல்வேறு இணைப்பு சாதனங்கள் வழியாகவும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ![]() அதே போல் இந்த நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் பிரைவசி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு மட்டுமல்லாமல், பாதுகாப்பாக இத்தகைய தகவல்களை மற்றவர்களிடம் பறிமாறும் பல தொழில்நுட்பம் வந்து விட்டன. இருப்பினும் இவை இணையத்தில் இயங்க உள்கட்டமைப்பும் பின்னெலும்பும் தேவைப்படுகின்றன. இதற்காக புதுமையான மற்றும் புரட்சிகரமான முயற்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர் (mesh) வலைப்பின்னல் நெட்வொர்க். |
Nixi (national internet exchange of india)- இந்த அமைப்பானது இந்தியாவின் இணைய வசதிக்கு முதுகெலும்பாய் உள்ளது. நமக்கு தேவைப்படும் இணையம் மற்றும் இணையம் சார்ந்த வசதிகளை ISP (Internet service provider) மூலமாக இந்த அமைப்பு நம்மிடம் கொண்டு சேர்க்கிறது.
Subscribe to:
Posts (Atom)