PaidVerts

Tuesday 12 February, 2013

ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.
பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர்.
ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது.

கண்கள், இதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் கணனி சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன.
இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை மனிதன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறான். வருகிற மார்ச் 11ம் திகதி வரை அவனை பொதுமக்கள் பார்த்து மகிழலாம்.
செயற்கை மனிதனின் சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், செயற்கை நுரையீரல்கள், ஸ்வாசீன் பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கோபுக்காட்சி

Copyrights : tech.lankasri.com


மின்னஞ்சல் படிக்கப்பட்டு விட்டதா? இல்லையா? என தெரிந்து கொள்வதற்கு.

நாம் அனுப்பிய மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்து படித்து விட்டாரா? இல்லையா? என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். 
இதற்கு Right Inbox என்ற Application உதவி புரிகிறது. ஜிமெயில் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த வசதியை Google Chrome, Firefox, Safari உலாவிகளில் பயன்படுத்த முடியும்.
1. முதலில் Right Inbox தளத்திற்கு சென்று "Install Now" என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் உலாவிக்கு ஏற்றது போன்று, தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
3. தற்போது உங்கள் உலாவியில் Extension ஆக இது Add ஆகி விடும். ஒரு முறை உங்கள் Browser-ஐ close செய்து ஓபன் செய்யுங்கள் அல்லது ஜிமெயிலை Refresh செய்யுங்கள்.
4. இப்போது உங்கள் ஜிமெயிலில் "Right Inbox is Ready" என்று வருவதை Continue கொடுங்கள்.
5. அடுத்த பக்கத்தின் Grand Access என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
இங்கே Grand Access கொடுப்பதால் உங்கள் Password போன்ற தனிப்பட்ட தகவல்களை அவர்களால் Access செய்ய முடியாது.
6. இப்போது மின்னஞ்சல் ஒன்றை Compose செய்யுங்கள். அதில் சில புதிய வசதிகள் இருப்பதை காணலாம்.அதில் Track தான் நாம் பயன்படுத்தப் போகும் வசதி.
மின்னஞ்சலை Compose செய்யும் போது Track என்பதை கிளிக் செய்து அனுப்பவும்.
7. இதன்பின் மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்ததும், உங்களுக்கு ஒரு செய்தி வரும். இதிலிருந்து நீங்கள் படித்துவிட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம். 

QR Code - இனை தயாரித்துக்கொள்வதற்கு உதவும் மென்பொருள்

நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக உச்சத்தை தொட்டுவரும் தொழில்நுட்ப உலகில் Bar Code - இற்கு அடுத்தபடியாக தற்போது QR Code - இன் பயன்பாடு துரித கதியில் அதிகரித்து வருகின்றது.இதற்கு காரணம் Bar Code - இனை காட்டிலும் QR Code - இனை கைப்பேசிகள் போன்ற அதிநவீன இலத்திரனியல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுதல், இலகுத்தன்மை, பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்பனவற்றினை குறிப்பிடலாம்.
இவ்வாறான QR Code - இனை தயாரித்துக்கொள்வதற்கு QR Label Creator எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் எழுத்துக்கள், இணைய முகவரிகள் ஏனைய தரவுகளை உள்ளடக்கியதாக QR Code - இனை உருவாக்கிக்கொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி

 

புதிய வகை வைரஸ் மென்பொருள் அறிமுகம்

இணையப்பாவனையினூடாக பரவும் வைரஸ்கள், மல்வேர்கள் போன்றவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அன்டி வரைஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான மென்பொருட்களில் Bitdefender Internet Security மென்பொருளும் சிறந்த செயற்பாடுடையதாகக் கருதப்படுகின்றது. இவ்வாறிருக்கையில் இம்மென்பொருளிற்கான புதிய பதிப்பான Bitdefender Internet Security 2013 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அத்துடன் ஒருவருடத்திற்கான சீரியல் இலக்கமும் இலவசமாக தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


இம்மென்பொருளை நிறுவுவதற்கு கணினி கொண்டிருக்கவேண்டிய தகைமைகள்.
1. Microsoft Windows XP,Vista, 7 அல்லது Windows 8 இயங்குதளம்
2. CPU: 800MHz processor
3. RAM: 1 GB
4. வன்றட்டில் 1.8 GB இடவசதி

தரவிறக்கச் சுட்டி
சீரியல் இலக்கம் - Q5YW7GP அல்லது 3NVQXKI

copyrights tech.lankasri.com 

Thursday 10 January, 2013

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அவற்றைப் போக்கும் வகையிலான பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்.

1. அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒழுங்கு படுத்த:

விண்டோஸ் 8 தரும் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மூலம், அப்ளிகேஷன் டைல்ஸ்களை, நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். முதலில் அவை, எந்த வரிசையிலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது போல காணப்படும். இது இப்படி இருந்தால் நன்றாகவும், நமக்கு எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்குமே என்று பலர் எண்ணுவார்கள். இவற்றை நம் விருப்பப்படி மாற்றி அமைக்க வழிகள் தரப்பட்டுள்ளன. ஸ்டார்ட் ஸ்கிரீனில் வலது பக்கம் கீழாக உள்ள சிறிய மைனஸ் அடையாளத்தை (–) கிளிக் செய்திடவும். இது அனைத்து டைல்ஸ்களையும், சிறிய தோற்றம் உள்ளவையாக மாற்றி அமைக்கும். இப்போது குழுவாக உள்ள டைல்ஸ் மீது கிளிக் செய்து, திரையில் நீங்கள் விரும்பும் இடத்திற்கு இழுத்துச் சென்று விடவும். இந்த குழுக்களுக்கு நீங்கள் விரும்பும் பெயரையும் தரலாம். குழுக்களுக்கான டைல்ஸ் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் இடது கீழாக உள்ள Rename பட்டனில் கிளிக் செய்திட்டால், பெயரை மாற்றி அமைக்க வழி காட்டப்படும்.


2. ஐ.எஸ்.ஓ. டிஸ்க் இமேஜ் பைல்களைக் கையாளுதல்:

ஐ.எஸ்.ஓ. பைல் என அழைக்கப்படும் டிஸ்க் இமேஜ் பைல்கள் பொதுவாக சிடி அல்லது டிவிடி ஒன்றில் உள்ள பைல்களை ஸ்டோர் செய்து வைத்திடப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் காண முடியாது. ஆனால், விண்டோஸ் 8 தரும் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இவற்றைக் காணலாம். பைல் எக்ஸ்புளோரரில், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறியவும். பின்னர் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, விண்டோவின் மேலாக வண்ணத்தில் அமைந்துள்ள Image Tools என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Mount என்ற ஐகான் மீது கிளிக் செய்திடவும். இப்போது, குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைல், ஒரு சிடி அல்லது டிவிடி ட்ரைவ் போல திறக்கப்படும். வழக்கம் போல டிஸ்க் ஒன்றில் உள்ள பைல்களை எப்படிக் கையாள முடியுமோ, அதே போல இந்த பைல்களையும் கையாளலாம். இனி, இதனை எப்படி மூடுவது? இடது புறப் பிரிவில், பைல் எக்ஸ்புளோரர் வழியாக, ஐ.எஸ்.ஓ. பைலுக்கான புதிய ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். ரைட் கிளிக் செய்து Eject என்பதைத் தேர்ந்தெடுத்தால், இந்த பைல் மூடப்படும்.


3. எளிதாக பிரிண்ட் செய்தல்:
விண்டோஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய சிஸ்டங்களில் பிரிண்ட் செய்வதற்கான இன்டர்பேஸ் எளிய முறைகளில் உள்ளன என்றாலும், போட்டோ பைல்களைக் கையாளும் அப்ளிகேஷன்கள் வழியே பிரிண்ட் செய்வது சற்று குழப்பத்தினைத் தரும் அனுபவமாகவே நமக்கு இருந்து வருகிறது. ஏனென்றால், இவற்றில் வெளிப்படையான பிரிண்ட் அல்லது மெனு ஆப்ஷன் தரப்பட்டிருக்காது. தேடித்தான் கண்டறிய வேண்டும். அப்படியே கிடைத்தாலும், வழக்கமான பிரிண்ட் இடைமுகத்திற்கும், இவை தரும் விண்டோக்களுக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கும். ஆனால், இந்த குழப்பம் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இல்லை. ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பிரிண்ட் செய்வது Devices என்னும் சார்ம்ஸ் மூலம் மேற்கொள்ளப் படுகிறது. இதற்கு கர்சரை மேல் வலது அல்லது வலது கீழ் மூலைக்குக் கொண்டு செல்லவும். அல்லது விண்டோஸ் மற்றும் சி (Windows + C) கீகளை ஒரு சேர அழுத்தவும். அடுத்து Devices என்பதனைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் பிரிண்டரைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பதிலாக கண்ட்ரோல் மற்றும் க கீகளை (Ctrl and P) ஒரு சேர அழுத்தலாம்.


4. எளிதான ஸ்கிரீன் ஷாட்:


விண்டோஸ் 7 மற்றும் முந்தைய சிஸ்டங்களில், ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக மாற்ற, பிரிண்ட் ஸ்கிரீன் (PrtScn) அழுத்தி, கிளிப் போர்டில் தங்கும் படத்தினை, இமேஜ் ரைட்டர் (பெயிண்ட், அடோப் போட்டோ ஷாப்) புரோகிமில் பேஸ்ட் செய்து, பைலை உருவாக்குவோம். விண்டோஸ் 8 சிஸ்டம் இதனைத் தானாகவே உருவாக்குகிறது. விண்டோஸ் கீயினை அழுத்திக் கொண்டு, Print Screen கீயை அழுத்தவும். சில நொடிகள், ஸ்கிரீன் காட்சி சற்று ஒளியிழந்து பின் மீண்டும் உயிர் பெறும். அடுத்து Pictures லைப்ரேரியைத் திறந்து Screenshots என்ற போல்டரைத் திறக்க வேண்டும். அங்கு ‘Screenshot (1) என்ற பெயரில், நீங்கள் எடுத்த ஸ்கிரீன் ஷாட் காட்சி பைலாக இருக்கும். அடுத்தடுத்து எடுக்கும் படங்கள், தொடர் எண்ணுடன் பெயரிடப்படும். நீங்கள் அடுத்து இந்த படக்கோப்பின் பெயரையும் பார்மட்டினையும் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.


5. அப்ளிகேஷன் அனைத்திலும் தேடல் வசதி:

நீங்கள் எந்த விண்டோஸ் 8 அப்ளிகேஷனில் இருந்தாலும், தேடல் வசதி உங்களுக்கு உடனே கிடைக்கிறது. அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளாக நாம் தேடத் தொடங்கினால், அது சில வேளைகளில் இயலாமல் போகலாம். அல்லது தலையைச் சுற்றித் தொடும் வழியாக இருக்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இந்த வேலை எளிதாக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்து தேடல்களும் Search charm என்ற டூலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற, சார்ம்ஸ் பாரினை இயக்க வேண்டும். இதற்கு மவுஸ் கர்சரை மேலாக வலது அல்லது இடது மூலையில் சுழற்ற வேண்டும். இதன் பின் Search என்பதில் கிளிக் செய்திட வேண்டும். மாறாக, விண்டோஸ் கீயுடன் கி கீயை ஒருசேர அழுத்த வேண்டும். இப்போது சர்ச் பாக்ஸ் மூலம் தேடுங்கள். தேடல் முடிவுகள், நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் சார்ந்தே கிடைக்கும். டெஸ்க்டாப்பிலிருந்து Search charm திறக்கப்பட்டால், அப்ளிகேஷன் தேடல் ஒன்று மேற்கொள்ளப்படும்.


6. சிஸ்டம் டாஸ்க் மேற்கொள்ள:
பழைய விண்டோஸ் இயக்கங்களிலிருந்து, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுகையில், ஸ்டார்ட் ஸ்கிரீனில் ஸ்டார்ட் பட்டன் இல்லாதது, டெஸ்க்டாப்பில் டாஸ்க் பார் இல்லாதது ஆகிய இரண்டு நிலைகளும், சற்று தடுமாற்றத்தை உண்டாகும். ஆனால், இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒரு சிறிய சலுகையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இது குறித்து எந்த அறிவிப்பினையும் அது தரவில்லை. மவுஸ் கர்சரை கீழாக இடது ஓரம் கொண்டு செல்லவும். சிறிய இமேஜ் தோன்றும் வரை கர்சரை அங்கு வைத்திருக்கவும். இனி, ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு பாப் அப் மெனு தோன்றும். இதில் பல சிஸ்டம் வேலைகளுக்கான ஷார்ட்கட் வழிகள் காட்டப்படும். (எ.கா. கண்ட்ரோல் பேனல் அல்லது பைல் எக்ஸ்புளோரர் திறந்திட) டெஸ்க்டாப்பினைத் திறக்கவும் ஒரு ஷார்ட் கட் உண்டு. இவற்றைப் பயன்படுத்தி நாம் வழக்கமான வேலைகளை மேற்கொள்ளலாம்.


7. பைல் ஹிஸ்டரி வழி பேக் அப்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் சிஸ்டம் தரும் பேக் அப் வசதியினைத் தேடினால், அது வீணான வேலையாகவே இருக்கும். இந்த வசதி இப்போது பைல் ஹிஸ்டரியாகத் (File History) தரப்பட்டுள்ளது. இந்த வசதி தானாகவே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை லைப்ரரியில் சேவ் செய்யப்படும் பைல்களுக்கு பேக் அப் எடுக்கிறது. இதற்கு ஒரு டிஸ்க் உள்ளாகவோ, வெளியாகவோ தேவைப்படலாம். அல்லது நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் களிலும் இதனை அமைக்கலாம். இதனை செட் செய்திட, கண்ட்ரோல் பேனல் திறந்து, ‘Save backup copies of your files with File History’ என்பதில் கிளிக் செய்திடவும். புதிய ட்ரைவ்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவை காட்டப்படும். நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவகளும் காட்டப்படும். பேக் அப் பைல்கள் எதில் சேவ் செய்யப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். Select drive முடித்த பிறகு Turn on என்பதில் கிளிக் செய்திடவும். பைல்கள் அனைத்தும் இவ்வகையில் பாதுகாப்பாக சேவ் செய்திடப்பட்டு இருக்கும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இந்த ட்ரைவில் இருந்து பைல்களை காப்பி செய்து பயன்படுத்தலாம்.

Copyrights : Dinamalar 

10 ஜிபி பைல் அஞ்சலில் அனுப்பலாம்

இணையத்தின் வழி பைல் அனுப்புவதில் இதுவரை இருந்த தடையை, கூகுள் உடைத்தெறிந்துள்ளது. 10 ஜிபி அளவு உள்ள பைலையும் தன் கூகுள் ட்ரைவிலிருந்து , ஜிமெயில் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது. இது வழக்கமாக அஞ்சல் வழி தற்போது அனுப்பப்படும் பைலைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். ஜிமெயிலில், கூகுள் ட்ரைவில் உள்ள பைலை, அது 10 ஜிபிக்குள் உள்ளவரையில் அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. புதிய மெயில் கம்போஸ் விண்டோ பயன்படுத்துபவர்கள், இந்த அறிவிப்பினைப் பெற்றிருக்கலாம். இது குறித்து மேலும் அறிய விரும்புபவர்கள் http://gmailblog. blogspot.com /2012/11/gmailanddrivenewwaytosendfiles.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Copyrights: Dinamalar 

கூகுள் மெயில்: சில தேடல் வழிகள்

கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப் பயன்படுத்தி, நம் தேடல்களின் முடிவுகளை விரைவாகப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
from: குறிப்பிட்ட நபரிடமிருந்து வந்துள்ள மெயில்களை மட்டும் பெற. எ.கா.from:
kannan:கண்ணன் என்பவரிடமிருந்து வந்த மெயில்கள் மட்டும் காட்ட.
to:நாம் அனுப்பிய மெயில்களில், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட. எ.கா: to:kannan.கண்ணன் என்பவரிடமிருக்கு (நீங்களோ அல்லது மற்றவர்கள், அந்த மெயிலைப் பயன்படுத்தி) அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட.
subject: மெயில்களில் உள்ள சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ள சொற்களில் தேடிப் பெற. எ.கா.subject:dinner சப்ஜெக்ட் வரியில் உள்ள சொற்களில் “dinner” என்ற சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட.
OR:இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதனைத் தேடி, அச்சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட. எ.கா. from:
kannan OR from:lakshmi.கண்ணன் அல்லது லஷ்மி என யாரிடமிருந்தும் வந்த மெயில்களைக் காட்ட. இதில் இந்த கட்டளைச் சொல் OR எப்போதும் கேபிடல் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
(hyphen): குறிப்பிட்ட சொல் உள்ள கடிதங்களைக் காட்டாமல் இருக்க. எ.கா. dinner movie:கடிதங்களில், என்ற சொல் மட்டுமே உள்ளவை. அவற்றில் movie என்ற சொல் இருந்தால் அது தேவையில்லை.
label: குறிப்பிட்ட ஒரு லேபில் கொண்ட கடிதங்களில் மட்டும் தேட. எ.கா.from:kannan label: myfamily; myfamily என்ற லேபிலில் உள்ள கடிதங்களில், kannan அனுப்பிய கடிதம் மட்டும்.
has:attachment: அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டவும். எ.கா. from:
kannan has:attachment: இங்கு கண்ணனிடமிருந்து வந்த மெயில்களில், அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும்.
list:குறிப்பிட்ட மெயிலிங் லிஸ்ட்டில் இருந்து பெற்ற மெயில்கள் மட்டும். எ.கா. list:info@example.com. info@example.com என்ற சொற்களை ஹெடரில் பெற்ற மெயில்கள் மட்டும். அதாவது இந்த மெயிலிங் லிஸ்ட்டிலிருந்து பெற்ற மற்றும் அந்த லிஸ்ட்டுக்கு அனுப்பப்பட்ட மெயில்கள் மட்டும்.
filename: இணைக்கப்பட்ட, குறிப்பிட்ட பைல் அல்லது பைல் வகையினைப் பெற. எ.கா.filename:physicshomework.txt “physicshomework.txt” என்ற அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும். label:work filename:pdf: “work” என்ற லேபில் இடப்பட்டு, பி.டி.எப். பைல் அட்டாச்மெண்ட் ஆக உள்ள மெயில்கள் மட்டும்.
“ "(மேற்கோள் குறிகள்): இந்த குறிகளுக்குள் இடப்பட்ட டெக்ஸ்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டப்பட. எ.கா. “i’m feeling lucky”: “i’m feeling lucky” என்ற சொற்களை உடைய மெயில்கள் மட்டும். இந்த தேடலில் பெரிய, சிறிய எழுத்து வித்தியாசம் பார்க்காமல் தேடப்படும். எடுத்துக் காட்டாக இந்த தேடலில் “I’m feeling lucky” எனச் சொற்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் காட்டப்படும்.
இன்னொரு எடுத்துக் காட்டினையும் இங்கு பார்க்கலாம். subject:”dinner and a movie” என்று கொடுத்தால், சப்ஜெக்ட் கட்டத்தில், “dinner and a movie” என்ற சொற்கள் உள்ள மெயில்கள் மட்டும் என்று பொருள்.
in:anywhere: பொதுவாக நாம் கொடுக்கும் தேடல்கள் வினாக்கள், இன் பாக்ஸில் மட்டும் தேடிக்கொடுக்கப்படும். அவ்வாறு இல்லாமல், Spam மற்றும் Trash பெட்டிகளில் உள்ள மெயில்களிலும் தேடப்பட வேண்டும் எனில், கட்டளை வரியை இவ்வாறு அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டு: in:anywhere
movie: All Mail, Spam,மற்றும் Trash ஆகிய அனைத்திலும் “movie” என்ற சொல் உள்ள மெயில்களைத் தேடித் தா என்பது இதன் பொருள்.
cc:இந்த இரு பீல்டுகளிலும் உள்ளதைத் தேடு என்பது பொருள். எடுத்துக்காட்டாக, cc:kannan எனக் கொடுத்தால், கண்ணனுக்கு என்ற பீல்ட் வழி கொடுக்கப்பட்ட மெயில்களை மட்டும் தேடிக் காட்டு என்பது பொருள். இதே போல் bcc:என்ற பீல்டுக்காகவும் தேடலாம்.
after:before: குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பப்பட்ட மெயில்களைக் காட்டு என்பது இதன் பொருள். எடுத்துக்காட்டு after:2004/04/16 before:2004/04/18: 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 லிருந்து 18 வரை அனுப்பப்பட்ட மெயில்கள்.
is:chat:இந்தக் கட்டளை சேட் மெசேஜ்களில் மட்டும் தேடலுக்காகப் பயன்படுத்தப்படும். எடுத்துக் காட்டாக எனக் கொடுத்தால், சேட் மெசேஜ்களில் “monkey” என்ற சொல் பயன்படுத்தப்படும் மெசேஜ் மெயில்களை மட்டும் காட்டவும்.

CopyRights : Dinamalar