PaidVerts

Wednesday 17 July, 2013

மனித உடலைத் தாங்கும் செயற்கை வன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள் சாதனை (வீடியோ இணைப்பு) !

மனித உடலுக்கு வடிவத்தைக் கொடுப்பதுடன் உடற்பாகங்களை தாங்குவதில் எலும்புகளால் ஆக்கப்பட்டுள்ள வன்கூடுகளின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
எனினும் சில சமயங்களில் இவ்வாறான எலும்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களால் உடலைத் தாங்கிக்கொண்டு அசைவதற்கு இயலாமல் போகலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகொடுக்கக்கூடிய செயற்கையான புறவன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
MK3 Exoskeleton Suit என்றழைக்கப்படும் இந்த செயற்கை வன்கூடானது 7 அடி உயரமானதாகவும், 55 பவுண்ட் எடை உடையதாகவும் காணப்படுகின்றது.
எனினும் இதன் விலைதான் சற்று அதிகமாகும். அதாவது 123,000 டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 







தவறுகளை சுட்டிக் காட்டும் பேனா அறிமுகம் !

ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது.
இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது.
இது பொருத்தமான அதிர்ச்சிகளின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Lernstift எனப்படும் இப்பேனாவானது கற்றலில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel) !

இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான்.
இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது.

இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது.
முந்தைய தலைமுறை Processor-களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1. கணனி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி.
2. பழைய மடிக்கணனிகளை விட 50% அதிக Battery Life.
3. ஒன் செய்த 3 நொடிகளில் கணனி இயங்க ஆரம்பித்துவிடும்.
4. பழைய கணனிகளை விட நான்கு மடங்கு அதிக வேகம்.
20 நிமிட HD Video - களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி. Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.

Wednesday 12 June, 2013

சோனி அறிமுகப்படுத்தும் வாட்டர் புரூவ் டேப்லட் !

ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
Xperia Z எனும் தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் இந்த டேப்லட்கள் 10.1 அங்குல அளவு 1920 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.5 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Snapdragon S4 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனத்தில் 8.1 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 2.2 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.
இவற்றின் சேமிப்பு நினைவகமானது 16GB ஆக அமைந்துள்ளதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 32 GB வரை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இவை இந்தியப் பெறுமதியில் 44,990 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. 



தற்போது பேஸ்புக் சட்டிங் மூலம் புகைப்படங்களையும் அனுப்பலாம் !

இணைய உலகில் முதற்தர சமூக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் ஆனது தற்போது பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இப்பயனர்களை தொடர்ந்து தக்கவைக்கும் முகமாகவும், புதிய பயனர்களை தன்பால் ஈர்க்கும் வகையிலும் பல்வேறுபட்ட புதிய அம்சங்களை உட்புகுத்தி வரும் அந்நிறுவனம் தற்போது மேலும் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது பேஸ்புக்கினூடாக நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும்போது விரும்பிய புகைப்படங்களையும் இலகுவாக அனுப்பி மகிழக்கூடிய வசதியே அதுவாகும்.
இப்புதிய வசதியானது பயனர்களை அதிகளவில் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Screen Capture பயன்படும் புத்தம் புதிய மென்பொருள் !


கணனித் திரையில் இடம்பெறும் செயற்பாடுகளை Capture செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது SmartsysSoft Screen Capture எனும் மென்பொருளும் தற்போது இணைந்துள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் எந்தவொரு அப்பிளிக்கேஷனையும் Capture செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் jpg, gif, bmp, png போன்ற கோப்பு வகைகளைாக சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதன் உதவியுடன் Capture செய்யப்பட்ட படத்தின் மீது டெக்ஸ்ட், கோடுகள், வெவ்வேறு வடிவங்கள் போன்றவற்றினை வரைந்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கமெராக்களில் இருந்து அழிந்த புகைப்படங்களை மீட்பதற்கு !


நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பயனாக தற்போது அதிகளவில் டிஜிட்டல் கமெராக்களே பயன்பாட்டில் காணப்படுகின்றன.
இக்கமெராக்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை சேமிப்பதற்கு அவற்றில் நிரந்தரமான அல்லது பிரத்தியேகமான மெமரி கார்ட்கள் காணப்படும்.
இச்சேமிப்பு சாதனங்களிலில் இருந்து அழிந்துபோன புகைப்படங்களை இலகுவாக மீட்பதற்கு DataToUS Card Recovery எனும் மென்பொருள் பெரிதும் உதவுகின்றது.
இதன் மூலம் குறித்த கமெராவிலிருந்து மெமரி கார்ட்டினை நீக்காது நேரடியாகவே அழிந்த புகைப்படங்களை மீட்க முடிவதுடன், புகைப்படம் தவிர வீடியோ கோப்புக்கள் மற்றும் ஆடியோ கோப்புக்களையும் கமெராவிலிருந்து மீட்டுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தரவிறக்கச் சுட்டி

உரிமம்: Techlankasri