PaidVerts

Friday 13 September, 2013

ஜிமெயில் அறிமுகப்படு​த்தியுள்ள புத்தம் புதிய வசதி !

மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஜிமெயில் ஆனது காலத்திற்கு காலம் புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் அண்மையில் மின்னஞ்சல்களை உருவாக்குவற்கான புதிய பொப் அப் விண்டோவினை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த விண்டோவானது வலது புற கீழ் மூலையில் சிறிய அளவு விண்டோவாக தோன்றுவதாக காணப்பட்டது.
ஆனால் தற்போது குறித்த விண்டோ திரை முழுவதும் தோன்றக்கூடியவாறு(Full Screen Compose Window) மாற்றியமைத்துள்ளது.
இந்த வசதியினை பெறுவதற்கு ஜிமெயில் பொப் அப் விண்டோவின் வலது கீழ் பகுதியிலுள்ள More Option என்பதை தெரிவு செய்து தோன்றும் மெனுவில் Default to Full-Screen என்பதனை தெரிவு செய்யவும்.
இதேவேளை அண்மையில் மின்னஞ்சல்களை இலகுவாக தரம்பிரிக்கக்கூடியவாறு டேப் வசதியையும் ஜிமெயில் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday 12 September, 2013

மடிக்கணனி வாங்க சில டிப்ஸ்கள் !

இன்று பள்ளி படிக்கும் மாணவர்கள் தொடங்கி கல்லூரி, ஆபிஸ் என்று அனைத்திலும் தற்போது லேப்டாப் வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று சந்தையில் ஏராளமான மடிக்கணனிகள் நமக்கு கிடைக்கின்றன ஆனால் அவற்றில் எது சிறந்தது என்று நாம் சற்று குழம்புவோம்.
ஏனென்றால் நாம் அதை மற்றவைகளுடன் அதை ஒப்பிட்டு பார்க்கையில் ஒன்றை விட ஒன்று பெட்டராக தான் தெரியும்.
நீங்கள் சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் இங்கு சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதை பாருங்கள் அதன் பின்பு நீங்கள் மிக எளிதாக நல்ல லேப்டாப்பை வாங்குவீர்கள்.
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விடயத்தை கவனமாக பார்க்கவேண்டும் நீங்களே பாருங்கள்.
 
* பிராஸஸர்(Processor) என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7.
அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.
* எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processorஐ intel Core i7, Intel Core i5, Intel Core i3 என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
* இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட திறன் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processorஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
* இதை விட தரம் குறைவான Processorஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.
* எனவே Intel® CoreTM i7-640M Processor 2.80 GHz அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும்.
* இந்த நம்பரையும் நீங்கள் கவனமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது.
* 2.00 GHz லேப்டாப் மொடலை விட 2.80 GHz மடிக்கணனி மொடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் அதில் வேறு எந்த சிறப்பம்சமும் இல்லை என்று பொருள் நண்பரே.
* கணிப்பொறியில் மிக முக்கியமான விடயம் RAM நீங்கள் கணனியை திறந்த பின்பு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கணனியின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது.
* அதனால் இன்றைய அட்வான்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
* இதில் இன்னொரு முக்கியமான விடயம் DDR3 என்ற அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் மடிக்கணனியில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள்.
* பொதுவாக விலை குறைந்த மடிக்கணனி வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, எனவே ரேம் விடயத்தில் சற்றி கவனம் தேவை நண்பரே.
* பொதுவாக கணனியை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கணனியின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக நினைக்கிறார்கள்.
* உங்களுக்கு முதலில் ஒரு பொதுவான விடயத்தை சொல்கிறேன் கணனி இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
* ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதிவேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
* மேலும் நீங்கள் கோரல்ட்ரா (Coreldraw), போட்டோஷொப் (photoshop) போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
* டி.வி.டி. டிரைவ்(DVD DRIVE) நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவனம் எடுக்க தேவை இல்லை.
ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
* விலை குறைந்த மடிக்கணனி அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிராபிக்ஸ் கார்டு இணைந்திருப்பது இல்லை.
கிராபிக்ஸ் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.
* நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோஷொப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று.
* அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.
* இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விடயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.
* இதில் Dedicated Graphic என்று நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிட்டி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை.
கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.
* ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.
* அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
* போட்டோஷொப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபிக்ஸ் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.
* விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.
* இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Windows 8 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள்.
இவை மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெர்சன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கும் நண்பரே.
* இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெர்சனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெர்சனை தேர்ந்தெடுங்கள்.
Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிக சிறந்தது.
Windows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் (Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.
அடுத்ததாக புதிய வகை மடிக்கணனிகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்
இவ்வளவு தான் நண்பரே இதை நீங்கள் சரி பார்த்து வாங்கினால் உங்களது மடிக்கணனி தான் பெஸ்ட்.

Wednesday 17 July, 2013

கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள் !

இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணனி பயன்படுத்துகிறோம். பல நேரங்களில்  இக்கணனியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன.
எனவே உங்கள் கணனியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம்.

1. உங்கள் கணனியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணனிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணனியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் . புதிதாகக் கணனி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள்.
அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணனியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என்று ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என்று ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby (http://www.digsby.com/) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணனியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே தொடங்கும். இதற்கு auto startup என்று பெயர்.
இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் தொடங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள். MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணனியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின்னர் கணனியின் வேகம் அதிகரித்தது.

9. கணனியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரஜ்எதிர்ப்பான் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்பான் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணனிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணனிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

லேப்டொப் பட்டரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்கு !

லேப்டொப் கணனிகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டரிகள் காலம் செல்லச் செல்ல பொதுவாக அவற்றின் பாவனைத் திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதற்காக குறித்த பேட்டரிகளின் நிலை தொடர்பில் முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள BatteryCare எனும் சிறிய மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமான மென்பொருளில் உதவியுடன் பட்டரிகளை மட்டுமன்றி CPU, Hard Disk போன்றவற்றின் வெப்பநிலைகளையும் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு லேப்டொப்பினை பாவனை செய்ய முடியும்.

மனித உடலைத் தாங்கும் செயற்கை வன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள் சாதனை (வீடியோ இணைப்பு) !

மனித உடலுக்கு வடிவத்தைக் கொடுப்பதுடன் உடற்பாகங்களை தாங்குவதில் எலும்புகளால் ஆக்கப்பட்டுள்ள வன்கூடுகளின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
எனினும் சில சமயங்களில் இவ்வாறான எலும்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களால் உடலைத் தாங்கிக்கொண்டு அசைவதற்கு இயலாமல் போகலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகொடுக்கக்கூடிய செயற்கையான புறவன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
MK3 Exoskeleton Suit என்றழைக்கப்படும் இந்த செயற்கை வன்கூடானது 7 அடி உயரமானதாகவும், 55 பவுண்ட் எடை உடையதாகவும் காணப்படுகின்றது.
எனினும் இதன் விலைதான் சற்று அதிகமாகும். அதாவது 123,000 டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 







தவறுகளை சுட்டிக் காட்டும் பேனா அறிமுகம் !

ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது.
இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது.
இது பொருத்தமான அதிர்ச்சிகளின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Lernstift எனப்படும் இப்பேனாவானது கற்றலில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel) !

இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான்.
இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது.

இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது.
முந்தைய தலைமுறை Processor-களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1. கணனி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி.
2. பழைய மடிக்கணனிகளை விட 50% அதிக Battery Life.
3. ஒன் செய்த 3 நொடிகளில் கணனி இயங்க ஆரம்பித்துவிடும்.
4. பழைய கணனிகளை விட நான்கு மடங்கு அதிக வேகம்.
20 நிமிட HD Video - களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி. Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.