PaidVerts

Tuesday 22 October, 2013

மனித மூளையை போன்று செயல்படும் கணனி! IBM நிறுவனம் சாதனை !

மனித மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, மனிதன் இயங்குவதற்கு இன்றியமையாத ஒன்று.
இதனை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
அதாவது, மனித மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும்.
மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒன்று, ஒருவகை மின்னணு இரத்தத்தை கணனியின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணனிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும்.
சூரிச்சில் உள்ள இந்நிறுவனத்தின் சோதனைக் கூடத்தில் இவ்வாறு செயற்படக்கூடிய கணனியின் செயல்முறை விளக்கத்தை IBM டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் ஆகியோர் வழங்கினர்.
இவர்கள் கூறுகையில், தற்போதுள்ள கணனிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கணனியை தம்மால் உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போதைக்கு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அரைவாசி அளவுக்கு பெரியதாக இருக்ககூடிய கணனியை ஒரு மேசையில் வைக்கும் அளவுக்கு சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதிலும் குறிப்பாக ஒரு சூப்பர் கணனியை ஒரு சக்கைரைக்கட்டி அளவுக்குள் அடக்குவதுதான் தமது நோக்கம் என்றும், இதற்கு மூளையை போன்றே கணனி செயல்படுவதற்கான முறையை கண்டுபிடித்தால் சாத்தியமாகும் என்றும் கூறுகின்றனர்.
இன்றைய நிலையில் IBM நிறுவனத்தின் அதிதீவிரமான சக்தி வாய்ந்த கணனியாக இருப்பது வட்சன் என்ற கணனியாகும்.
அமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இக்கணனி மனித மூளையை தோற்கடித்து விட்டது.
எனினும் இது நியாயமற்றது என்று கூறும் விஞ்ஞானிகள், மனித மூளை 20 Watts சக்தியை மட்டுமே பயன்படுத்தியது என்றும், கணனியோ 85,000 Watts சக்தியை பயன்படுத்தியது என கூறுகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு இரத்தத்தால் செயல்படும் கணனிகள் பதில் கூறும் என IBM நிறுவன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment