இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் இணையம் என்பது ஒரு புரியாத புதிராக இருக்கலாம்.
இணையத்தை பயன்படுத்தும் போது நம் இணைப்பிற்கென ஒரு IP Address தரப்படுகிறது.
இந்த முகவரியை இரண்டு விதமாக அறிந்து கொள்ளலாம்.
முதல் வழி
1. முதலில் Network Sharing Center என்பதனைத் திறந்து கொள்ளவும்.
இதனை திறப்ப்தற்கு உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம் ட்ரேயில்,
நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து Open Network and
Sharing Center என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
அல்லது ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் தேடல் கட்டத்தில்,
network and sharing center என டைப் செய்திடவும். இதற்கான லிங்க்
கிடைத்தவுடன் அதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது Network and Sharing Center கிடைக்கும். இங்கு Local Area
Connection என்பதில் கிளிக் செய்திடவும் அல்லது உங்கள் இணைய இணைப்பிற்கு
ஒரு பெயரினைக் கொடுத்திருந்தால் View your active networks என்பதன் கீழாக
அது காட்டப்படும், அதில் கிளிக் செய்திடவும்.
3. Status என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகையில், Details என்னும்
பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Network Connection Details என்ற
டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
இதில் அப்போதைய இணைப்பிற்கான ஐ.பி. முகவரியும், அதன் தொடர்பான
தகவல்களும் கிடைக்கும். இந்த தகவல்களில், நீங்கள் பெற்றிருக்கும் இணைப்பின்
காலம், காலம் காலாவதியாகும் நாள், சேவை நிறுவன முகவரி, சர்வரின் முகவரி
ஆகியவை காட்டப்படும்.
இரண்டாவது வழி
1. ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்திடவும்.
2. இங்கு cmd /c ipconfig & pause என டைப் செய்து எண்டர் தட்டவும்.
3. இது டாஸ் கட்டளைப் புள்ளி ஒன்றைக் காட்டும். நாம் கேட்ட தகவல்கள்
இங்கு தரப்பட்டிருக்கும். ஏதேனும் ஒரு கீயை அழுத்தினால், இந்த டாஸ் கட்டம்
மூடப்படும்.
4. மேலே சொன்னபடி நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படின் cmd
/c ipconfig /all & pause என கட்டளை அமைத்து எண்டர் தட்டவும்.
5. நேரடியாக டாஸ் கட்டம் பெற்று, தேவையான தகவல்களைப் பெற ipconfig or ipconfig/all என்றபடியும் கட்டளைகளை அமைத்துப் பெறலாம்.
No comments:
Post a Comment