PaidVerts

Tuesday 18 December, 2012

இந்த வார இணையதளம் - உலக காரட் அருங்காட்சியகம்

உடம்பிற்கு நல்லது, இரத்த ஓட்டத்தினைச் சீரமைக்கும் என்றெல்லாம் சொல்லி, நமக்குச் சிறு வயதிலிருந்து காரட் கொடுத்து நம் பெற்றோர் வளர்த்திருப்பார்கள். (சில வேளைகளில் அதிக விலை விற்றால், இரத்த ஓட்டத்தினை எகிறவும் வைக்கும்). இந்த காரட் எத்தகையது, எத்தனை வகை காரட் உள்ளது, இதன் பூர்விகம் என்ன, இவற்றிற்கான விதைகள் எங்கிருந்து எப்படி வந்தன போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உலக காரட் அருங்காட்சியம் ஒன்று இணையத்தில் இயங்கி வருகிறது. இதன் முகவரி http://www.carrotmuseum.co.uk/.
இதில் நுழைந்து பார்த்தவுடன் காரட் குறித்து நமக்கு அளிக்கப்படும் தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இந்த இணைய தளத்தில், Start Your Tour என்ற பகுதியில் இருந்து தொடங்கினால், காரட் எப்படி எல்லாம் வளர்க்கப்பட்டது என்ற பழங்காலத் தகவல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
அடுத்ததாக, காரட் வண்ணங்கள் என்ற பிரிவு. காரட் எப்போதும் ஒன்று அல்லது இரண்டு வண்ணங்களில் தான் இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு, இதன் வண்ணங்கள் நமக்கு புதியவையாய் கிடைக்கின்றன. இவற்றோடு, காரட் நம் உடம்பிற்கு என்ன சத்துவகையைத் தரும், காரட் கொண்டு தயாரிக்கப் படக் கூடிய உணவிற்கான சமையல் குறிப்பு ஆகியவை கிடைக்கின்றன. இப்படியே, பல்வேறு பிரிவுகளில் தகவல்களைத் தந்து ஆச்சரியம் தரும் இந்த தளத்தை ஒருமுறையேனும் பார்த்துவிடுங்கள்.


Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13364&ncat=4

1.6 கோடி சாம்சங் கம்ப்யூட்டர்கள்

இந்த ஆண்டில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்பட்ட, ஒரு கோடியே 60 லட்சம், சாம்சங் டேப்ளட் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களை, இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத் தலைவர், ஜின் பார்க் அறிவித்துள்ளார். சாம்சங் தொடுதிரையுடன் கூடிய அல்ட்ரா புக் கம்ப்யூட்டரினை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. ATIV Smart PC and ATIV Smart PC Pro Series 5 Ultra Touch ஆகியவை மற்ற கம்ப்யூட்டர்களாகும். இவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களாகும்.
Ativ Smart PC and Ativ Smart PC Pro ஆகியவற்றில், பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம், நோட்புக் பெர்சனல் கம்ப்யூட்டராக இருக்கும் இவற்றை, டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் சாதனமாக மாற்றலாம். இவற்றில் 11.6 அங்குல அகலத்தில் திரை தரப்பட்டுள்ளது. இவற்றின் தடிமன் முறையே, 9.9.மிமீ மற்றும் 11.9 மிமீ. ஆக உள்ளது. Ativ Smart PC ரூ.75,490 என விலையிடப் பட்டுள்ளது. Ativ Smart PC விலை ரூ.53,990.
5 Ultra Touch வரிசையில் வந்துள்ள விண்டோஸ் 8, சாம்சங் நோட்புக் கம்ப்யூட்டர்கள், தொடுதிரை கொண்ட சாம்சங் நிறுவன முதல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்களாகும். இதன் திரை, மல்ட்டி டச் வசதி கொண்டு, 13.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையான அளவில் எச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி 3 போர்ட் ஒன்று மற்றும் யு.எஸ்.பி 2 வகை போர்ட் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. மல்ட்டி எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஈதர்நெட் போர்ட், 1.3 மெகா பிக்ஸெல் இணைய கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.64,990.

Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13363&ncat=4

எக்ஸெல் தொகுப்பில் ரோமன் எண்கள்

சில வேளைகளில், வழக்கமான எண்களுக்குப் பதிலாக, ரோமன் எண்களை (எ.கா. VIII) நாம் பயன்படுத்த விரும்புவோம். அனைத்து எண்களுக்கும் நாம் ரோமன் எண்ணை நினைவில் வைத்து பயன்படுத்த முடியாது. எக்ஸெல் தொகுப்பில் இதற்கென சிறிய பார்முலா ஒன்றைக் கொடுத்தால், அது தானாகவே ரோமன் எண்ணை அமைத்துக் கொள்கிறது. அந்த பார்முலா =ROMAN(123). இதில் 123 என்ற இடத்தில், நாம் பயன்படுத்த விரும்பும் ரோமன் எண்ணுக்கான வழக்கமான எண்ணை அமைத்துவிடலாம். இந்த இடத்தில் 1 முதல் 3,999 வரை பயன்படுத்தலாம். (இந்த ரேஞ்சுக்கு மேலாக ரோமானியர்கள் எண்களைப் பயன்படுத்தவில்லையா எனத் தெரியவில்லை) ரோமன் எண்கள் டெக்ஸ்ட்டாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. எனவே இதனை எந்த கால்குலேஷனிலும் பயன்படுத்த முடியாது.

ஐபேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்

புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன. எந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. ட்ராப் பாக்ஸ் (Dropbox):

க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப் பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில் அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில் வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது. இதன் பிரபலமான தன்மையினாலேயே, ஆப்பிள் நிறுவனமும் இதே போல ஒன்றை உருவாக்கியது. ஆனால், மக்கள் அதனை விரும்பவில்லை.


2. பிளிப் போர்ட் (Flipboard):

உங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப் போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம். இதனைப் பெற https://itunes.apple. com/us/app/flipboardyoursocialnews/id358801284?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

3. பேஸ்புக் (Facebook):
நீங்கள் பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது. இதனைப் பெற இணைய தளத்தில் https://itunes.apple.com/us/app/facebook/id284882215?mt=8 என்ற முகவரிக்குச் செல்லவும்.

4. எய்ம் (AIM for IPAD):
பெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட் இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன் பலருக்கு பிடித்துள்ளது. இதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும் கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும் போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம். இதுவும் இலவசமே. இதனைப்பெற https://itunes. apple.com/us/app/ aimforipad/id364193698?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.


 Coprights : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13361&ncat=4 

வேர்ட் டிப்ஸ்: பெரிய எழுத்து சொற்களில் சோதனை

ஆங்கிலத்தில் கேப்பிடல் லெட்டர்ஸ் என்று சொல்லப்படும் பெரிய எழுத்துக்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றில் எழுத்துப் பிழை உள்ளதா என சோதனை செய்யப்படுவதில்லை. இவற்றையும் ஸ்பெல்லிங் சோதனைக்கு உட்படுத்த கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் Spelling & Grammar என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு Ignore Words in UPPERCASE என்ற வரியின் முன் உள்ள செக்பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களும் சோதனை செய்யப்படும். 


சரியான அளவில் டேபிள் செல்கள்

வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும் நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன் அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. பின் அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி அமைக்கிறோம். ரூலர் இருந்தாலும் கட்டம் ஒன்றின் அகலம் எவ்வளவு எனச் சரியாகத் தெரிவதில்லை.
இத்தனை அங்குல அளவில் தான் அல்லது சென்டிமீட்டர் அளவில் தான் ஒரு கட்டம் இருக்க வேண்டும் என நாம் மிகத் துல்லிதமாக அமைக்க முடிவதில்லை. அவ்வாறு அமைத்திட சிறப்பான வழி ஒன்று உள்ளது. அளவுடன் அமைக்க வேண்டிய கட்டத்தில் கர்சரை நிறுத்திவிட்டு பின் மவுஸின் முனையை ரூலரில் கிடைக்கும் கட்டங்களின் முனையில் கொண்டு செல்க. இப்போது வெறுமனே மவுஸினை இழுக்காமல் ஆல்ட் கீயை அழுத்துக. இப்போது அந்த கட்டம் எவ்வளவு அங்குல அகலத்தில் இருக்கிறது எனக் காட்டப்படும். இனி உங்களுக்குத் தேவையான அகல அளவு கிடைக்கும் வரை மவுஸை அழுத்தியபடி நகர்த்தி கட்டத்தினை அமைத்திடலாம்.


Monday 17 December, 2012

கேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது

பிரபலமான ஹோட்டல்களின் பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்பி, அதில் தரப்பட்டிருக்கும் லிங்க் மூலம், கம்ப்யூட்டர் களைத் தாக்கும் கேமரூ எனப்படும் மால்வேர் இந்தியாவில் 1.89 சதவிகிதக் கம்ப்யூட்டர்களில் பரவி உள்ளதாக ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், அதிக அளவில் பயணங்களை மேற்கொள்பவர்கள், தங்கள் மெயில் லிஸ்ட்டில் இந்த மால்வேர் கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு பலியாகிறார்கள். இந்த மால்வேர், அஞ்சல்களில் உள்ள, தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இந்த மால்வேர் BKDR_ANDROM.P என்ற பைல் பெயரில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ட்ரெண்ட் மைக்ரோ இதற்கான பாதுகாப்பினைத் தருகிறது. மேலே குறிப்பிட்ட பைலைக் கண்டறிந்து அழிக்கிறது.

Copyrights: Dinamalar
 http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13356&ncat=4

உலகை அணைக்க உதவும் கரங்கள்

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் எங்கு இருந்தாலும் சரி, அவர்களுடன் நினைத்த நேரத்தில் டெக்ஸ்ட் மூலம், எந்தவிதக் கட்டணமும் இன்றி உரையாட விரும்புகிறீர்களா? நட்பின் பாலத்தை இறுக்கமாகப் பிணைக்க எந்த கயிறு நமக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தேடுகிறீர்களா? உங்களுக்கு உதவத்தான் WhatsApp என்ற அப்ளிகேஷன் உள்ளது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தால் போதும். உங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் செய்தி அவர்களுக்குச் சென்றுவிடும். இதற்கு ஒரே ஒரு தேவை, உங்களிடமும், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்களிடமும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள சாதனம் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இன்றைய வழக்கம் போல, இணைய இணைப்பில் இரண்டு போன்களும் இருக்க வேண்டும்.
முதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் டேப்ளட் அல்லது ஸ்மார்ட் போன் என ஏதேனும் ஒரு சாதனத்தில், இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுண்லோட் செய்திடவும்.இதனை “Play Store” என்ற இணைய தள ஸ்டோர் மூலம் மேற்கொள்ளலாம். தேடல் தளம் ஒன்றின் மூலம் “WhatsApp” என்று டைப் செய்து, பட்டியலிடப்படும் தளங்களில் ஒன்றிலிருந்து இதனை டவுண்லோட் செய்திடவும்.
இந்த அப்ளிகேஷனுக்கான ஐகான் பச்சை நிற வண்ணத்தில், சித்திரக் கதையில், கதா பாத்திரங்கள் பேசும் குமிழ் போல, உள்ளாக ஒரு டெலிபோன் படத்துடன் இருக்கும். முதன் முதலில் நீங்கள், இந்த அப்ளிகேஷனை இயக்கத் தொடங்குகையில், உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும். அடுத்து, உங்கள் பெயர், உங்கள் நண்பர்களுக்கு எப்படிக் காட்டப்பட வேண்டும் எனக் கேட்டு, அதனையும் வாங்கிக் கொள்ளும். இதில் உங்கள் படம் அல்லது உங்களைக் காட்டும் நீங்கள் விரும்பும் படம் ஒன்றையும் அமைக்கலாம். இதனைப் பின்னொரு காலத்திலும் நீங்கள் மேற்கொள்ளலாம். அடுத்து, ஒரு காலியாக உள்ள பக்கம் “Chats” என்ற தலைப்பில் காட்டப்படும். இதன் நடுவே பென்சில் ஸ்கெட்ச் ஒன்று காட்டப்படும். இதுதான் உங்களுடைய முகப்புப் பக்கம் (homepage).
அடுத்து இந்த WhatsApp அப்ளிகேஷன், உங்கள் தொலைபேசியில் உள்ள எண்கள் உள்ள போன்களில், எதில் எல்லாம், இந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அவற்றைப் பட்டியலிடும். இதன் வலது மேலாக, லென்ஸ் மற்றும் பென்சில் படம் ஒன்று காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், உங்கள் Chats மூலம், நீங்கள் தேடலை மேற்கொள்ளலாம். உங்கள் நண்பர் எவருடனாவது, டெக்ஸ்ட் சேட்டிங் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால், திரையில் காட்டப்படும் அவரின் பெயர் மேலாகத் தொடவும். இது உடனேயே ஒரு அரட்டைப் பெட்டியைத் (‘chat box’) திறக்கும். இதில் செய்தி ஒன்றை நீங்கள் டைப் செய்து, உடன் அனுப்பலாம். மேலாக வலது பக்கம், ஒரு பேப்பர் கிளிப் படமும், ஸ்மைலி ஐகானும் காட்டப்படும். பேப்பர் கிளிப் ஐகானில் கிளிக் செய்து, ஏதேனும் போட்டோ, வீடியோ, ஆடியோ, இடம் மற்றும் பிறர் தொடர்பு தகவல்களை இணைத்து அனுப்பலாம்.
Gallery என்பதில் கிளிக் செய்தால், உங்கள் போனில் உள்ள காலரி திறக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷன் மூலம் எந்த படத்தை அனுப்ப விரும்புகிறீர்களோ, அந்த படத்தின் மீது கிளிக் செய்து, செய்தியுடன் இணைத்து அனுப்பலாம். அப்போதே, கேமராவினைத் திறந்து, போட்டோ எடுத்து, இணைத்து அனுப்பலாம். இதே போல வீடியோ பைல்களையும் அனுப்பலாம். அடுத்து வாய்ஸ் ரெகார்டரில் பதிவு செய்த ஆடியோ பைல்கள், அப்போது பதியப்படும் குரல் பைல், என எதனையும் இணைத்து அனுப்பலாம்.
அடுத்து, Location என்பதன் கீழ், நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களை அனுப்பலாம். இதனை உங்கள் நண்பருக்குத் தெரிவிப்பதன் மூலம், உலகின் எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனை, உங்கள் நண்பருக்குத் தெரியப்படுத்தலாம். அதற்கேற்ற வகையில் உங்கள் நண்பர் உங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்மைலி ஐகானில் கிளிக் செய்தால், பல எமோட்டிகான் எனப்படும் உணர்ச்சிப் படங்கள் பட்டியல் கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நீங்கள் எளிதில் பின்னர் தேர்வு செய்வதற்காக, அண்மையில் நீங்கள் பயன்படுத்திய (recent emoji) ஸ்மைலி ஐகான்கள் பட்டியலிடப்படும். இதில் காட்டப்படும் ஒவ்வொரு ஐகான் கிளிக்கிலும், ஐகான்கள் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கும்.
இந்த செயல்பாட்டின் போது, முந்தைய ஸ்கிரீன் செல்ல வேண்டும் என்று விரும்பினால், பேக் ஸ்பேஸ் கீயினை அழுத்தினால் போதும். உங்களிடம் ஆண்ட்ராய்ட் போன் இருந்து, இதுவரை நீங்கள் இதனைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், உடனே இந்த வசதியைப் பயன்படுத்தவும்.

Copyrights : Dinamalar
 http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13355&ncat=4