PaidVerts

Tuesday 18 December, 2012

இந்த வார இணையதளம் - உலக காரட் அருங்காட்சியகம்

உடம்பிற்கு நல்லது, இரத்த ஓட்டத்தினைச் சீரமைக்கும் என்றெல்லாம் சொல்லி, நமக்குச் சிறு வயதிலிருந்து காரட் கொடுத்து நம் பெற்றோர் வளர்த்திருப்பார்கள். (சில வேளைகளில் அதிக விலை விற்றால், இரத்த ஓட்டத்தினை எகிறவும் வைக்கும்). இந்த காரட் எத்தகையது, எத்தனை வகை காரட் உள்ளது, இதன் பூர்விகம் என்ன, இவற்றிற்கான விதைகள் எங்கிருந்து எப்படி வந்தன போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உலக காரட் அருங்காட்சியம் ஒன்று இணையத்தில் இயங்கி வருகிறது. இதன் முகவரி http://www.carrotmuseum.co.uk/.
இதில் நுழைந்து பார்த்தவுடன் காரட் குறித்து நமக்கு அளிக்கப்படும் தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இந்த இணைய தளத்தில், Start Your Tour என்ற பகுதியில் இருந்து தொடங்கினால், காரட் எப்படி எல்லாம் வளர்க்கப்பட்டது என்ற பழங்காலத் தகவல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
அடுத்ததாக, காரட் வண்ணங்கள் என்ற பிரிவு. காரட் எப்போதும் ஒன்று அல்லது இரண்டு வண்ணங்களில் தான் இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு, இதன் வண்ணங்கள் நமக்கு புதியவையாய் கிடைக்கின்றன. இவற்றோடு, காரட் நம் உடம்பிற்கு என்ன சத்துவகையைத் தரும், காரட் கொண்டு தயாரிக்கப் படக் கூடிய உணவிற்கான சமையல் குறிப்பு ஆகியவை கிடைக்கின்றன. இப்படியே, பல்வேறு பிரிவுகளில் தகவல்களைத் தந்து ஆச்சரியம் தரும் இந்த தளத்தை ஒருமுறையேனும் பார்த்துவிடுங்கள்.


Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13364&ncat=4

No comments:

Post a Comment