PaidVerts

Friday 14 December, 2012

இந்த வார டவுண்லோட் - விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு ஸ்டார்ட் 8



விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து தரப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வாங்கிவிட்டீர்களா? ஏற்கனவே ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து பழகிய உங்களுக்கு, அது இல்லாமல், கம்ப்யூட்டரை இயக்குவது சற்றுக் கடினமாக இருக்கலாம். சில வேளைகளில், இந்த சிஸ்டத்தை யார் கேட்டா? என்றெல்லாம் எரிச்சல் அடைவீர்கள். ஸ்டார்ட் பட்டன் இணைக்கலாம் என்று, அதற்கான அப்ளிகேஷனைத் தேடினால், ஐந்து டாலரிலிருந்து 50 டாலர் வரை கட்டணம் கேட்கும் இணைய தளங்களைக் காணலாம்.
இவற்றிலிருந்து விலகி, முற்றிலும் இலவசமாகவே, இதற்கான தீர்வைத் தரும் தளம் ஒன்று உண்டு. அதன் முகவரி http://www.classicstart8.com/.
இந்த தளத்தில் சென்று, இலவசமாக டவுண்லோட் செய்வதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், ClassicStart8 Setup.exe என்ற அப்ளிகேஷன் பைல் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும். பின்னர், இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். உடனேயே, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கிய ஸ்டார்ட் பட்டன் மற்றும் அதன் செயல்பாடுகள், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கும். தொடர்ந்து அந்த ஸ்டார்ட் பட்டன், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இணைத்துத் தரப்பட்டுள்ளது போலவே செயல்படும். ஏற்கனவே நாம் பைல்களைக் கையாள ஸ்டார்ட் பட்டன் பயன்படுத்தியது போல இதனையும் பயன்படுத்தலாம்.

Copyright by Dinamalar:

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13256&ncat=4

No comments:

Post a Comment