PaidVerts

Tuesday 18 December, 2012

1.6 கோடி சாம்சங் கம்ப்யூட்டர்கள்

இந்த ஆண்டில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்பட்ட, ஒரு கோடியே 60 லட்சம், சாம்சங் டேப்ளட் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களை, இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத் தலைவர், ஜின் பார்க் அறிவித்துள்ளார். சாம்சங் தொடுதிரையுடன் கூடிய அல்ட்ரா புக் கம்ப்யூட்டரினை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. ATIV Smart PC and ATIV Smart PC Pro Series 5 Ultra Touch ஆகியவை மற்ற கம்ப்யூட்டர்களாகும். இவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களாகும்.
Ativ Smart PC and Ativ Smart PC Pro ஆகியவற்றில், பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம், நோட்புக் பெர்சனல் கம்ப்யூட்டராக இருக்கும் இவற்றை, டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் சாதனமாக மாற்றலாம். இவற்றில் 11.6 அங்குல அகலத்தில் திரை தரப்பட்டுள்ளது. இவற்றின் தடிமன் முறையே, 9.9.மிமீ மற்றும் 11.9 மிமீ. ஆக உள்ளது. Ativ Smart PC ரூ.75,490 என விலையிடப் பட்டுள்ளது. Ativ Smart PC விலை ரூ.53,990.
5 Ultra Touch வரிசையில் வந்துள்ள விண்டோஸ் 8, சாம்சங் நோட்புக் கம்ப்யூட்டர்கள், தொடுதிரை கொண்ட சாம்சங் நிறுவன முதல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்களாகும். இதன் திரை, மல்ட்டி டச் வசதி கொண்டு, 13.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையான அளவில் எச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி 3 போர்ட் ஒன்று மற்றும் யு.எஸ்.பி 2 வகை போர்ட் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. மல்ட்டி எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஈதர்நெட் போர்ட், 1.3 மெகா பிக்ஸெல் இணைய கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.64,990.

Copyrights: Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13363&ncat=4

No comments:

Post a Comment