PaidVerts

Tuesday 18 December, 2012

வேர்ட் டிப்ஸ்: பெரிய எழுத்து சொற்களில் சோதனை

ஆங்கிலத்தில் கேப்பிடல் லெட்டர்ஸ் என்று சொல்லப்படும் பெரிய எழுத்துக்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றில் எழுத்துப் பிழை உள்ளதா என சோதனை செய்யப்படுவதில்லை. இவற்றையும் ஸ்பெல்லிங் சோதனைக்கு உட்படுத்த கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் Spelling & Grammar என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு Ignore Words in UPPERCASE என்ற வரியின் முன் உள்ள செக்பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களும் சோதனை செய்யப்படும். 


சரியான அளவில் டேபிள் செல்கள்

வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும் நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன் அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. பின் அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி அமைக்கிறோம். ரூலர் இருந்தாலும் கட்டம் ஒன்றின் அகலம் எவ்வளவு எனச் சரியாகத் தெரிவதில்லை.
இத்தனை அங்குல அளவில் தான் அல்லது சென்டிமீட்டர் அளவில் தான் ஒரு கட்டம் இருக்க வேண்டும் என நாம் மிகத் துல்லிதமாக அமைக்க முடிவதில்லை. அவ்வாறு அமைத்திட சிறப்பான வழி ஒன்று உள்ளது. அளவுடன் அமைக்க வேண்டிய கட்டத்தில் கர்சரை நிறுத்திவிட்டு பின் மவுஸின் முனையை ரூலரில் கிடைக்கும் கட்டங்களின் முனையில் கொண்டு செல்க. இப்போது வெறுமனே மவுஸினை இழுக்காமல் ஆல்ட் கீயை அழுத்துக. இப்போது அந்த கட்டம் எவ்வளவு அங்குல அகலத்தில் இருக்கிறது எனக் காட்டப்படும். இனி உங்களுக்குத் தேவையான அகல அளவு கிடைக்கும் வரை மவுஸை அழுத்தியபடி நகர்த்தி கட்டத்தினை அமைத்திடலாம்.


No comments:

Post a Comment